​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரூ.2,000 வெள்ள நிவாரணம் வழங்கக் கோரி கிராம மக்கள் சாலை மறியல்... போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம்

Published : Dec 18, 2024 3:37 PM

ரூ.2,000 வெள்ள நிவாரணம் வழங்கக் கோரி கிராம மக்கள் சாலை மறியல்... போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம்

Dec 18, 2024 3:37 PM

அரசு அறிவித்தபடி 2 ஆயிரம் ரூபாய் வெள்ள நிவாரணம் வழங்கக் கோரி, விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே குன்னம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள், புதுவை-திண்டிவனம் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பலர், சாலையில் படுத்துக்கொண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்ட பெண்களை தள்ளிவிட்டும், ஆண்களை சட்டையைப் பிடித்து இழுத்தும் சென்ற போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.