​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சாதிச் சான்றிதழ் இல்லாததால் பள்ளிக்குச் செல்லாத 6 குழந்தைகளை மீட்டு பள்ளியில் சேர்த்த காவல் உதவி ஆய்வாளர்

Published : Dec 18, 2024 9:06 AM

சாதிச் சான்றிதழ் இல்லாததால் பள்ளிக்குச் செல்லாத 6 குழந்தைகளை மீட்டு பள்ளியில் சேர்த்த காவல் உதவி ஆய்வாளர்

Dec 18, 2024 9:06 AM

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே சாதி சான்றிதழ் இல்லாமல் பள்ளிக்கு செல்லாத 6 குழந்தைகளை மீட்ட உதவி ஆய்வாளர் ஒருவர் பள்ளியில் சேர்த்துள்ளார்.

குளத்தூர் குறிஞ்சி நகரில் வசிக்கும் காட்டு நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த அந்தக் குழந்தைகள் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அங்கு புகார் ஒன்றை விசாரிக்கச் சென்ற உதவி ஆய்வாளர் முத்துராஜ், பிரச்சனை குறித்து கேட்டறிந்தார்.

உடனடியாக அருகிலுள்ள இந்து நாடார் நடுநிலைப் பள்ளிக்கு அவர்களை அழைத்துச் சென்ற அவர், சாதிச் சான்றிதழ் பெற தாம் ஏற்பாடு செய்வதாகக் கூறி, தனது சொந்த செலவில், புத்தகங்கள், உபகரணங்களை வாங்கிக் கொடுத்து பள்ளியில் சேர்த்துள்ளார்.