​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நகை அணிந்து கொள்வதில் மாமியார் - மருமகளிடையே தகராறு.. 5 மாத கர்ப்பிணி எடுத்த விபரீத முடிவு

Published : Dec 18, 2024 6:52 AM

நகை அணிந்து கொள்வதில் மாமியார் - மருமகளிடையே தகராறு.. 5 மாத கர்ப்பிணி எடுத்த விபரீத முடிவு

Dec 18, 2024 6:52 AM

சென்னை வேளச்சேரியில் நகை அணிந்து கொள்வதில் மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையில் 5 மாத கர்ப்பிணியாக இருந்த மருமகள் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

காமாட்சி என்ற அந்தப் பெண்ணுக்கு கடந்த மே மாதம் தான் திருமணம் நடைபெற்றுள்ளது. ஆட்டோ ஓட்டுநரான கணவர் மணிகண்டன் சவாரிக்கு சென்றிருந்த நேரம் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.