விழுப்புரம் மாவட்டம் கீழ்புத்துப்பட்டு அருகே நம்பிக்கை நல்லூர் மீனவ கிராமத்தில், பெண் தனியாக இருந்த வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீசியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
சிங்கப்பூரைச் சேர்ந்த சுரேந்தர் என்பவரின் மனைவி வீட்டில் தனியாக இருந்தபோது, அவரது வீட்டுக்குள் பக்கத்து வீட்டைச் சேர்ந்த புகழேந்தி என்பவர் நுழைந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சிங்கப்பூரில் இருந்து வந்த சுரேந்தர், புகழேந்தி வீட்டுக்குச் சென்று வாக்குவாதம் செய்ததாகவும், அதன் தொடர்ச்சியாக சுரேந்தர் மற்றும் அவரது சகோதரர் வீடுகள் மீது புகழேந்தியின் மகன் மதன் பெட்ரோல் குண்டுகள் வீசியதாகவும் கூறப்படுகிறது.