மதுரை நாகமலை புதுக்கோட்டையில் தனியார் பேருந்து டூவீலர் மீது மோதிய விபத்தில் பலத்த காயமடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த கல்லூரி மாணவர் துரையரசன் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
முன்னால் சென்ற பைக்கை முந்துவதற்காக வளைவில் வேகமாக சென்று டூவீலரில் பிரேக் பிடித்த துரையரசன் மீது எதிரே மற்றொரு வாகனத்தை வளைவில் முந்தி வந்த தனியார் பேருந்து மோதியதில் கீழே விழுந்த அவர் தலைக்கவசம் அணியாததால் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.