​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தாம்பரம் - வண்டலூர் மேம்பாலத்தில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து

Published : Dec 17, 2024 1:00 PM

தாம்பரம் - வண்டலூர் மேம்பாலத்தில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து

Dec 17, 2024 1:00 PM

தாம்பரம் - வண்டலூர் மேம்பாலம் மீது 3 கார்கள், ஒரு பேருந்து, பைக் உள்ளிட்ட 5 வாகனங்கள் விபத்தில் சிக்கின.

மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த ஸ்விப்ட் கார் மீது, பின்னால் வந்த தனியார் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது.

அப்போது அந்த வழியாக அதி வேகமாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் நின்றுகொண்டிருந்த தனியார் பேருந்து மீது மோதியதில், இருசக்கர வாகனம் பேருந்தின் அடியில் சிக்கியது.

பைக்கை ஓட்டி வந்த  இளைஞர் உயிர் தப்பினார். அதே சமயம் விபத்து நடந்ததை பார்வையிட்டபடியே எதிர்திசையில் மெதுவாகச் சென்ற ஒரு கார் மீது பின்னால் வந்த மற்றொரு கார் மோதியது.