விழுப்புரத்தில் கணபதி நகர், நேதாஜி நகர், லிங்கா நகர் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கிய மழைநீர் 17 நாட்களாகியும் வடியாததால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.
குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்திருப்பதால் விஷ ஜந்துக்கள் வருவதோடு, சுகாதாக்கேடு ஏற்படும் அபாயம் உள்ளதால் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.