​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நல்ல நோக்கம் தான் என்று பா.ம.க கௌரவத் தலைவர் ஜி.கே. மணி

Published : Dec 17, 2024 10:52 AM

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நல்ல நோக்கம் தான் என்று பா.ம.க கௌரவத் தலைவர் ஜி.கே. மணி

Dec 17, 2024 10:52 AM

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நல்ல நோக்கம் தான் என்று பா.ம.க கௌரவத் தலைவர் ஜி.கே. மணி தெரிவித்துள்ளார்.

வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தால் செலவு மிச்சமாகும் என்றும் அதிகாரிகளுக்கும் வாக்களிக்கும் மக்களுக்கும் ஒரே நேரத்தில் வேலை முடிந்து விடும் என்று கூறினார்.

இருப்பினும் அதிலுள்ள சில நடைமுறை சிக்கல்கள் குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க வேண்டும் என்றும் ஜி.கே.மணி கேட்டுக்கொண்டார்.