​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆசையோடு ஆபீஸ் போனாப்பா.. சாலையில் கிடந்த மண்ணால்... தலை நசுங்கி சிதைந்த கொடுமை..! அடுத்தடுத்த உயிர் பலி - கலெக்டர் எச்சரிக்கை

Published : Dec 16, 2024 6:55 PM



ஆசையோடு ஆபீஸ் போனாப்பா.. சாலையில் கிடந்த மண்ணால்... தலை நசுங்கி சிதைந்த கொடுமை..! அடுத்தடுத்த உயிர் பலி - கலெக்டர் எச்சரிக்கை

Dec 16, 2024 6:55 PM

வேலூர் மாவட்டம் கணியம்பாடி பகுதியை சேர்ந்த சம்பத் என்பவரின் மகள் அஸ்வினி. அங்குள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். திங்கிட் கிழமை காலை அஸ்வினியை அவரது சகோதரர் தனது ஸ்கூட்டரில் அலுவலகம் அழைத்துச்சென்றார். காட்பாடி செல்லும் சாலையில் கழிவு நீர் வாய்க்கால் பணிகள் நடக்கின்ற இடத்தில் கால்வாய்க்கு தோண்டப்பட்ட மண் சாலையில் சிதறிக்கிடந்தது.

எதிர்பாரத விதமாக அஸ்வினியின் சகோதரர் ஓட்டிச்சென்ற ஸ்கூட்டர் சாலையில் கிடந்த மண்ணில் சறுக்கியது இதில் பின்னால் அமர்ந்திருந்த அஸ்வினி நிலைதடுமாறி சாலையில் விழுந்தார். அவர் சாலையில் விழுந்த போது அவரை கடந்து சென்ற கழிவு நீர் அகற்றும் லாரியின் பின் சக்கரம் அஸ்வினியின் தலையில் ஏறி இறங்கியது. இதில் அவரது தலை முழுவதுமாக நசுங்கி சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். அதிர்ஷ்டவசமாக அவரது சகோதரர் உயிர் தப்பினார்.

விரைந்து வந்த போலீசார் அஸ்வினியின் சடலத்தை கைப்பற்றி பிணகூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். கடந்த சில தினங்களில் மட்டும் கழிவு நீர் கால்வாய் பணியை சுற்றி தடுப்பு அமைக்கப்படாத கவனக்குறைவால் ஒருவர், சாலையில் கிடந்த மண்ணில் சறுக்கி சுவிக்கி ஊழியர், மென்பொறியாளர் ஆகிய இருவர் என மொத்தம் 3 பேர் பலியானதாக தகவல் வெளியான நிலையில் சம்பவ இடத்துக்கு மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி நேரடியாக சென்றார்

 

விபத்து நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி, 3 மாதகாலமாக ஆமை வேகத்தில் நடக்கின்ற கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சி அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்

 

விபத்து ஏப்படி நடந்தது என்பது குறித்த விரிவான விவரங்களை கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர் சுப்பு லட்சுமி , சாலையில் கிடக்கும் மண்ணால் இனி இது போன்ற சம்பவங்கள் நடந்தால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரித்து சென்றார்

 

விபத்து தொடர்பாக சிசிடிவி காட்சிகளின் படி கழிவு நீர் அகற்றும் லாரி ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார். அதே நேரத்தில் போதிய முன்னெச்சரிக்கை இல்லாமல் மெத்தனமாக மேற்கொள்ளப்பட்டு வரும் கழிவு நீர் வாய்க்கால் பணிகளால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீதும், அதனை பார்வையிட்டு ஒழுங்குபடுத்த தவறிய மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் மீது காவல்துறையினர் சட்டப்பூர்வ நடவடிவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.