​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நீதிமன்ற வழக்கால் ஆசிரியர்கள் நியமனம் தாமதமாகி வருகிறது - அன்பில் மகேஸ்

Published : Dec 07, 2024 12:02 PM

நீதிமன்ற வழக்கால் ஆசிரியர்கள் நியமனம் தாமதமாகி வருகிறது - அன்பில் மகேஸ்

Dec 07, 2024 12:02 PM

திருச்சியில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் 47ஆவது பிறந்தநாளையொட்டி, திமுகவின் மூத்த முன்னோடிகள் 47 பேருக்கு, பொற்கிழி மற்றும் மளிகை பொருட்களை, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது PT Assistant 3000 ஆசிரியருக்கான தேர்வு நடத்தப்பட்டு சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி நிறைவடைந்து பணி வழங்கப்படக் கூடிய சூழலில், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் தொடர்ந்த வழக்கால், பணி நியமனம் செய்ய முடியாத நிலை உருவாகி உள்ளதாக அமைச்சர் கூறினார்.