​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிறிய ஒப்பந்ததாரர்கள் எப்படி முன்னேறுவார்கள்? உயர்நீதிமன்றம் கேள்வி..

Published : Dec 04, 2024 2:18 PM

சிறிய ஒப்பந்ததாரர்கள் எப்படி முன்னேறுவார்கள்? உயர்நீதிமன்றம் கேள்வி..

Dec 04, 2024 2:18 PM

நெடுஞ்சாலைப் பணிகளை மொத்தமாக பேக்கேஜிங் முறையில் டெண்டர் விட்டால் சிறிய ஒப்பந்ததாரர்களின் நிலை  என்னவாகும், அவர்களால் எப்படி முன்னேற முடியும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 50 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்பிலான 49 சாலைப் பணிகளுக்கு அறிவிக்கப்பட்ட பேக்கேஜிங் டெண்டர் அரசாணையை ரத்து செய்யக் கோரி முதல்நிலை ஒப்பந்ததாரர்கள் 8 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தனித்தனியாக டெண்டர் விடப்படுவதாகவும், புதுக்கோட்டையில் மட்டும் பேக்கேஜிங் முறையில் நடைமுறைபடுத்துவது சட்டவிரோதம் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், பேக்கேஜிங் டெண்டர் முறை பெரிய ஒப்பந்ததாரர்கள் மட்டும் வளர்ச்சி அடையும் வகையில் உள்ளதாக கூறி, வழக்கை ஒத்தி வைத்தனர்.