​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
போதைப்பொருள் விற்பனை தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகான் மகன் உட்பட 4 பேர் கைது..

Published : Dec 04, 2024 10:30 AM

போதைப்பொருள் விற்பனை தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகான் மகன் உட்பட 4 பேர் கைது..

Dec 04, 2024 10:30 AM

கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை ஆன்லைனில் வாங்கிப் பயன்படுத்தியதுடன் விற்பனையிலும் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட நடிகர் மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்ளக் உள்ளிட்ட 4 பேரிடம் போலீசார் இரண்டாவது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் கார்த்திகேயன் என்ற போதைப்பொருள் விற்பனையாளரிடமிருந்து கஞ்சா, மெத்தம்பெட்டமைன், மேஜிக் காளான் உள்ளிட்டவற்றை ஆன்லைனில் வாங்கி விற்றதாக அலிகான் துக்ளக், செய்யது சாகி, மொகம்மது ரியாஸ் அலி, பைசல் அகமது ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.