​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மழையால் சுவர் இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் காயம்..

Published : Dec 04, 2024 6:22 AM

மழையால் சுவர் இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் காயம்..

Dec 04, 2024 6:22 AM

சேலம் கோட்டை பகுதியில் வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததால் இரண்டு பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அஷ்ரப் என்பவருக்கு சொந்தமான 70 ஆண்டு பழைய அடுக்குமாடிக் குடியிருப்பை புதுப்பிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக கட்டிடத்தின் மேல் பகுதி திடீரென இடிந்து விழுந்ததில்  இருவரும் வீட்டின் உள்ளேயே மாட்டிக்கொண்டனர்.

பிறகு பொதுமக்களின் உதவியுடன் அவர்கள் மீட்கப்பட்டனர்.