கடலூரில் புயல் பாதிப்புகளை எதிர் கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் இருப்பதாக ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
ஃபெஞ்சல் புயல் மகாபலிபுரம் மற்றும் பரங்கிப்பேட்டை இடையே கரையை கடக்கும் எனக்கூறப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி கடலூர் மாநகராட்சி நகரப் பகுதிகளில் உள்ள 16 உயர் கோபுர மின்விளக்குகளை இறக்கும் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர்.
புயல் பாதிப்பால் காய்கறிகள் கிடைப்பது கடினம் என்பதால் காய்கறிகள் முன்கூட்டியே வாங்க பொதுமக்கள் கடைகளில் குவிந்தனர்.