மக்களால் நிராகரிக்கப்பட்ட சிலர் தவறான நடவடிக்கைகள் மூலம் நாடாளுமன்றத்தைக் கட்டுப்படுத்த முயற்சிப்பதாக, பிரதமர் மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன், செய்தியாளர்களை சந்தித்த பிரதமர், அனைத்துக் கட்சிகளிலும் தேர்வு செய்யப்பட்டுள்ள புதிய எம்.பி.க்கள் புதிய எண்ணங்களுடன் வரும் நிலையில், அவர்களின் உரிமைகளைவும், வாய்ப்புகளையும் பறிக்கும் வகையில் மற்ற உறுப்பினர்கள் நடந்து கொள்ளக் கூடாது என்றார்.
மக்களால் 80, 90 முறை நிராகரிக்கப்பட்டவர்கள், நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தத் தடையாக உள்ளதாகவும், மக்களின் உணர்வுகளையும், ஜனநாயகத்தையும் அவர்கள் அவமதிப்பதாக கூறிய பிரதமர், உலக நாடுகள் இந்தியாவை மிகவும் நம்பிக்கையுடன் பார்ப்பதால், அதை வலுப்படுத்தும் வகையில் நமது செயல்பாடுகள் அமைய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.