தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரிந்த 19 மாடுகளை பிடித்த மாநகராட்சி ஊழியர்கள், அவற்றை காரனேசன் மகப்பேறு மருத்துவமனை வளாகத்தில் கட்டி வைத்துள்ளனர்.
உரிமையாளர்கள் அபராதத் தொகையை செலுத்திவிட்டு மாடுகளை கொண்டு செல்லலாம் என மாநகராட்சி ஊழியர்கள் தெரிவித்தனர்.