​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
போலி மருத்துவரால் விபரீதம் குழந்தை பிறந்த சில நாட்களில் உயிரிழந்த பெண்

Published : Nov 21, 2024 8:03 PM

போலி மருத்துவரால் விபரீதம் குழந்தை பிறந்த சில நாட்களில் உயிரிழந்த பெண்

Nov 21, 2024 8:03 PM

கொடைக்கானல் கவுஞ்சி கிராமத்தில் குழந்தை பிறந்த சில நாட்களான பெண்ணிற்கு ஏற்பட்ட வயிற்று வலிக்கு, ஆன்டிபயாடிக் ஊசி செலுத்திய போலி மருத்துவரால் அந்த பெண் உயிரிழந்தார்.

மருந்தாளுநருக்கான டி-ஃபார்ம் படித்துவிட்டு மருத்துவம் பார்த்து வந்த பிரின்ஸ், குழந்தை பிறந்த பெண்ணின் உடலுக்கு ஏற்காத ஆன்டிபயாடிக் மருந்தை செலுத்தியதன் காரணமாக, அந்த பெண் உயிரிழந்ததாக, மக்கள் நல்வாழ்வுத்துறையின் மருத்துவக்குழுவினர் கூறினர்.

மேலும், மலைக்கிராமங்களில் இது போன்று மருத்துவம் படிக்காத நபர்களிடம் சிகிச்சை பெற வேண்டாம் என்றும், பொது சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.