​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மக்காச்சோளம், நிலக்கடலை பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகள்... வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை

Published : Nov 21, 2024 7:01 PM

மக்காச்சோளம், நிலக்கடலை பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகள்... வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை

Nov 21, 2024 7:01 PM

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே விவசாய பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்துவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

எட்டையபுரம், புதூர், கோவில்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளம், நிலக்கடலை போன்ற பயிர்களை காட்டுப்பன்றிகள், மான்கள் அழிப்பதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறிய விவசாயிகள், அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதனிடையே சிவலார்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கம்பத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் விவசாயி ஐயப்பன் என்பவரை காட்டுப்பன்றிகள் கடித்து குதறியதால், பலத்த காயமடைந்தார்.

மேல் சிகிச்சைக்காக அவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.