​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என நீதிமன்றத்தில் தனுஷ் - ஐஸ்வர்யா உறுதி..

Published : Nov 21, 2024 1:34 PM

சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என நீதிமன்றத்தில் தனுஷ் - ஐஸ்வர்யா உறுதி..

Nov 21, 2024 1:34 PM

சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா சென்னை முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில் உறுதிபட தெரிவித்துள்ளனர்.

2004ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்ட அவர்கள், கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

விசாரணைக்காக நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான இருவரிடமும் நீதிபதி தனியாக அழைத்து சேர்ந்து வாழ விருப்பம் உள்ளதா என விசாரணை நடத்தினார்.

பிரிவதில் உறுதியாக இருப்பதாகவும், தங்களுக்கு விவாகரத்து வேண்டும் என்றும் நீதிபதியிடம் தனுஷ் - ஐஸ்வர்யா தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து வரும் 27ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.