சேலம் கிச்சிப்பாளையம் அடுத்த சன்னியாசிகுண்டு பகுதியில், மின்கசிவு காரணமாக மர அறுவை மில் மற்றும் குடோனில் தீப்பிடித்ததில் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான மரப்பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
இதன் உரிமையாளரான சந்தோஷ் வழக்கம் போல் இரவில் குடோனை மூடிவிட்டுச் சென்றபின் திடீரெனப் பற்றிய தீ குடோன் முழுவதும் பரவியது. பொக்லைன் இயந்திரம் மூலம் 20 அடி உயர சுற்றுச்சுவர் இடித்து அகற்றி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.