ரூ.7.5 கோடியில் அமைச்சர் தொடங்கிவைத்த பிறகும் தூர்வாரும் பணி தாமதம்
Published : Nov 20, 2024 3:08 PM
நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள படகு இல்ல ஏரியை 7 கோடியே 50 லட்ச ரூபாய் செலவில் தூர்வாரும் பணிகளை அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைத்தும், பணியைத் தொடங்குவதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஏரியின் மறுகரையில் பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து கிடப்பதாகவும், கால்வாய் வழியாக ஏரியில் கழிவுநீர் கலப்பதாலும் துர்நாற்றம் வீசுவதோடு, நோய்த்தொற்று ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளதால் தூர்வாரும் பணியை உடனடியாகத் தொடங்க அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்