​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சமைத்து பல மணி நேரமான உணவை சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் - மருத்துவர் அறிவுரை

Published : Nov 19, 2024 6:44 AM

சமைத்து பல மணி நேரமான உணவை சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் - மருத்துவர் அறிவுரை

Nov 19, 2024 6:44 AM

சிக்கன் ரைஸ் வாங்கி சாப்பிட்ட கோவையை சேர்ந்த பள்ளி மாணவி சென்னையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவையைச் சேர்ந்த 15 வயது பள்ளி மாணவி எலினா லாரட், பள்ளிகளுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டியில் கலந்து கொள்வதற்காக மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியருக்கு சென்றுள்ளார்.

போட்டியை முடித்துக்கொண்டு நேற்று காலை ஜி.டி. எக்ஸ்பிரஸ் ரயிலில் அவர் சென்னை திரும்பியுள்ளார்.

சிக்கன் ரைஸ் வாங்கி சாப்பிட்டதும் உடல் நலன் பாதிக்கப்பட்டதாக சென்னையில் உள்ள தனது உறவினரைத் தொடர்பு கொண்டு எலினா கூறியதால், சென்னை வந்தவுடன் அண்ணா நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றுள்ளார் சிறுமியின் உறவினர்.

சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதும் உடல் நிலை மோசம் அடைந்து எலினா உயிரிழந்தார்.

இந்நிலையில் சமைத்து முடித்த உணவுக்கு இவ்வளவு நேரம்தான் டைம்-மா? நீண்ட நேரம் கழித்து சாப்பிட்டால் என்ன ஆகும்? உடலில் முதலில் நடக்கும் அறிகுறிகள் என்னென்ன? சிக்கன் ரைஸ் சாப்பிட்டதால் சிறுமி உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில் எழும் கேள்விகளுக்கு மருத்துவரின் அட்வைஸ் இது.