தமிழ்நாட்டு மக்களுக்காக 94 வயது வரை உழைத்த கலைஞர் பெயரை அரசுத் திட்டங்களுக்கு வைப்பதில் என்ன தவறு என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
கை-ரிக்சாவை ஒழித்தது முதல் கம்ப்யூட்டர் கல்வியை தந்தது வரை நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய நம் கலைஞரின் பெயரை அரசுத் திட்டங்களுக்குச் சூட்டுவதும், சிலைகள் எழுப்புவதும் கலைஞர் அவர்களுக்கு நாம் செலுத்துகிற நன்றியின் வெளிப்பாடு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில், அதிமுக ஆட்சியில், அம்மா உணவகம், அம்மா சிமெண்ட், அம்மா உப்பு என்றெல்லாம் அரசுத்திட்டங்களுக்கு பெயர்களை சூட்டியது யார்? என்றும் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.