​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் குவியும் வெளிநாட்டுப் பறவைகள்..

Published : Nov 17, 2024 1:00 PM

கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் குவியும் வெளிநாட்டுப் பறவைகள்..

Nov 17, 2024 1:00 PM

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில்  செங்கால்நாரை, கூழைகிடா, பூநாரை,   கடல்ஆலா, வரி தலைவாத்து உள்ளிட்ட  வெளிநாட்டுப் பறவைகள்  ஆயிரகணக்கில் குவிந்துள்ளன.

ஆண்டு தோறும் வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர் முதல் மார்ச் வரை ரஷ்யா, ஈரான்,  ஈராக், இலங்கை, சைபீரியா, உள்ளிட்ட வெளி நாடுகளில் இருந்து அங்கு நிலவும் குளிரைப் போக்க இங்கு 294க்கும் மேற்பட்ட வகை பறவைகள் வந்து செல்வது வழக்கம்.

பல ஆயிரம் கிலோமீட்டர் தூரம்  கடல் கடந்து  வந்துள்ள  பறவைகள் சிறகு அடித்து பறக்கும் காட்சி காண்போர் கண்களைக் கவர்ந்து வருகிறது.