திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழக அரசின் இலவச வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பணியாற்றும் வட மாநிலத்தவர்கள், உளுந்தை ஊராட்சியில் உள்ள நூலகத்தையே தங்கும் விடுதியாக பயன்படுத்திவருவதாக புகார் எழுந்துள்ளது.
புத்தகங்கள் அடுக்கப்பட்டுள்ள நூலகத்தின் உள்ளேயே பணியாளர்கள் சமைத்தும், துணிகளைத் துவைத்து உலர வைத்து வருவதாகவும் அப்பகுதியினர் குற்றம்சாட்டினர்.
இந்த நூலகம், 1 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டு ஓராண்டாகியும் இன்னும் திறக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.