தேனி வீரபாண்டி அருகே, குச்சனூர் சாலையில், மதுபோதையில் கையில் வாக்கி டாக்கியுடன், வாகனங்களை நிறுத்தி ஒற்றை ஆளாக வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட போலி சிபிசிஐடி ஆபீசரை, போலீசார் கைது செய்தனர்.
இவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்து, கேரளத்தின் இடுக்கி மாவட்ட ஆட்டோ ஓட்டுநர் அளித்த தகவலில், அந்த நபர் போலீசாரிடம் சிக்கினார்.
அல்லிநகரத்தைச் சேர்ந்த வீனஸ் கண்ணன் என்ற அந்த நபருக்கு, வாக்கிடாக்கி எப்படி கிடைத்தது என்பது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.