சென்னையில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக வருகின்ற 16 மற்றும் 17 ஆகிய வார இறுதி நாட்கள், மற்றும் 23 மற்றும் 24 ம் தேதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
2025 ஜனவரி ஒன்றாம் தேதி 18 வயது பூர்த்தி அடைவோர், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், திருத்தம் செய்யக் கோருபவர்கள் இந்த முகாமைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு சென்னை மாநகராட்சி விடுத்த அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்கள் http://voters.eci.gov.in/ என்ற இணையதளம் மூலமாகவும் தங்களுடைய பெயர்கள் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.