​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ராமநாதபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு பணிக்கு வர மறுத்த மருத்துவர்கள்!.. பொதுமக்கள் வாக்குவாதத்திற்கு பிறகு தாமதமாக சிகிச்சை

Published : Nov 14, 2024 12:52 PM

ராமநாதபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு பணிக்கு வர மறுத்த மருத்துவர்கள்!.. பொதுமக்கள் வாக்குவாதத்திற்கு பிறகு தாமதமாக சிகிச்சை

Nov 14, 2024 12:52 PM

சென்னை கிண்டியில் அரசு மருத்துவமனையில் நேற்று மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்டதை கண்டித்து பரமக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவர்கள் காலை 8 மணி அளவில் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

நீண்ட நேரம் குழந்தைகள்,கர்ப்பிணிகள், வயதானவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் அவதியடைந்ததால் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, சமாதானம் அடைந்த மருத்துவர்கள் அரை மணி நேரம் தாமதமாக சிகிச்சையைத் தொடங்கினர்.