புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் இன்டர்நெட் இணைப்பு வழங்கும் பி.எஸ்.என்.எல் பைபர் கேபிளை 99 முறை திருடியவருக்கு வாழ்த்து தெரிவித்து
டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டது.
கடந்த 5 மாதங்களில் 99 முறை திருடு போனதால் அந்த சேவையை வழங்கி வரும் தனியார் நிறுவனம் இவ்வாறு பேனர் அடித்து நகரின் முக்கிய சாலையில் வைத்தது. எனினும் அந்த விளம்பர பதாகையை போலீஸார் அகற்றினர்.