நாதக பிரமுகரை தாக்கியதாக தி.மு.க நகர்மன்ற தலைவர் உள்ளிட்ட 15 பேர் மீது வழக்கு
Published : Nov 13, 2024 3:42 PM
நாதக பிரமுகரை தாக்கியதாக தி.மு.க நகர்மன்ற தலைவர் உள்ளிட்ட 15 பேர் மீது வழக்கு
Nov 13, 2024 3:42 PM
கன்னியாகுமரி மாவட்டம், குளச்சலில் நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்ட மேடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தாக்குதல் நடத்தியதாக திமுகவை சேர்ந்த, நகர்மன்ற தலைவர் நசீர் உள்பட 15 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
செவ்வாய் கிழமை அதிகாலை அண்ணாசிலை சந்திப்பில் நாம் தமிழர் கட்சியினர் மேடை அமைத்துக் கொண்டிருந்தபோது நசீர் தலைமையில் திரண்ட திமுகவினர் தகராறு செய்த தாக்கியதில் காயமடைந்ததாக அஸ்வின் என்பவரில் அளித்த புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.