ரூபிக் கியூப் விளையாட்டு கண்டுபிடிக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு
Published : Nov 10, 2024 7:22 AM
ரூபிக் கியூப் விளையாட்டு கண்டுபிடிக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு
Nov 10, 2024 7:22 AM
பல்கேரியாவைச் சேர்ந்த தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தில் வடிவமைப்புப் பிரிவு பேராசிரியராக இருந்த எர்னோ ரூபிக் என்பவர் ரூபிக் கியூப் என்ற விளையாட்டுக் கருவியைக் கண்டுபிடித்து 50 ஆண்டுகள் ஆகிறது. 1974-ல் தாம் கண்டுபிடித்த இந்தப் விளையாட்டு, யோசிப்பதையும், நினைவாற்றலையும் அதிகப்படுத்தக்கூடிய மிகச்சிறந்த கருவி என்று அவர் தெரிவித்துள்ளார்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் ஆர்வத்துடன் விளையாடும் இந்த ரூபிக் கியூப், பார்முலா அடிப்படையில் விளையாடப்படும் விளையாட்டாகும். இன்னும்கூட பலருக்குக் கைவராத விளையாட்டுதான் என்றாலும், மேக்ஸ் பார்க் என்பவர் சற்றேறக்குறைய மூன்று விநாடிகளில் முடித்ததுதான் இன்றுவரை உலக சாதனையாக உள்ளது.
இதுவரை உலகம் முழுவதும் 50 கோடி ரூபிக் கியூப் விளையாட்டுப் பொருள் உற்பத்தி ஆகியிருப்பதாகக் கூறப்படுகிறது. 43 என்ற எண்ணுக்கு அடுத்து 18 பூஜ்ஜியங்கள் போட்டால் கிடைக்கும் குயின்டில்லியன் என்ற இலக்கத்துக்கும் மேற்பட்ட முறைகளில் இந்த ரூபிக் கியூப் விளையாட்டை முடிக்க முடியும் எனக் கூறப்படுகிறது.