கடலூர் மாவட்டம் மஞ்சக்கொல்லை கிராமத்தில் வி.சி.க. கொடிக்கம்பம் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக பா.ம.க. வன்முறையை தூண்டும் வகையில் நடந்து கொண்டதாக திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
உளுந்தூர்பேட்டையில் பேட்டியளித்த அவர், இருதரப்பும் சமூக நல்லிணக்கத்தோடு வாழ வேண்டும் என்பதுதான் வி.சி.க.வின் விருப்பம் என்றார்.