ஆந்திராவில் சட்டம் ஒழுங்கை நிர்வகிக்கும் , உள்துறை அமைச்சர் டம்மியாக இருப்பதாக விமர்சித்து, உடனடியாக குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல் செய்ய வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ரோஜா ஆவேசமாக பேசியுள்ளார்.
திருப்பதி மாவட்டம் எலமெண்ட கிராமத்தில் 10ஆம் வகுப்பு மாணவி கத்தியால் தாக்கப்பட்டு, மயக்க மருந்து அடித்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து பேசிய ரோஜா, அரசியல் கட்சியினரின்அழுத்தம் காரணமாக போலீசார் மாணவி மீது வெறும் தாக்குதல் மட்டுமே நடத்தப்பட்டதாகக் கூறி உண்மையை மூடி மறைப்பதாகக் குற்றம் சாட்டினார்.
சந்திரபாபு நாயுடு ஆட்சிக்கு வந்து 120 நாட்களிலேயே பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட 110 அத்துமீறல்கள் ஆந்திராவில் நடந்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.