​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தொலைநோக்கி தொடர்பான ஆர்வலர்களுக்கு தொழில் நுணுக்கம் குறித்தும் கற்பிக்கிறார் ஆப்டிகல் டிசைனர்.!

Published : Nov 04, 2024 5:49 PM

தொலைநோக்கி தொடர்பான ஆர்வலர்களுக்கு தொழில் நுணுக்கம் குறித்தும் கற்பிக்கிறார் ஆப்டிகல் டிசைனர்.!

Nov 04, 2024 5:49 PM

எகிப்து நாட்டைச் சேர்ந்த கண்ணாடி வடிவமைப்பாளரான முக்தார் முகமது  என்பவர் தொலைநோக்கி மற்றும் லென்ஸ்களை தயாரித்து, உலக அளவில் தாய் நாட்டிற்கு பெருமை சேர்த்து வருகிறார்.

வானியல் தொலைநோக்கி தொடர்பான ஆர்வலர்களுக்கு தொழில் நுணுக்கம் குறித்த ஆலோசனைகளையும் முகமது வழங்கி வருகிறார்.

டான்டா என்ற இடத்தில் தொழிற்சாலை நிறுவியுள்ள அவர், நூற்றுக்கணக்கான பழமையான ஒளிப்பதிவு கேமராக்கள், லென்ஸ்கள் மற்றும் சினிமா படப்பிடிப்பு உபகரணங்களை உள்ளடக்கிய அருங்காட்சியகத்தை உருவாக்கியுள்ளார்.

தொலைநோக்கி மற்றும் நுண்ணோக்கிக்கான உயர்தர லென்ஸ் தயாரிப்பு குறித்தும் மாணவர்களுக்கு பாடம் கற்பித்து வருகிறார்.