​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
22 நாடுகளில் உணவுப் பஞ்சம் ஏற்படும் என ஐ.நா. ஏஜென்சி எச்சரிக்கை.!

Published : Nov 02, 2024 7:27 AM

22 நாடுகளில் உணவுப் பஞ்சம் ஏற்படும் என ஐ.நா. ஏஜென்சி எச்சரிக்கை.!

Nov 02, 2024 7:27 AM

காலநிலை மாற்றம், போர் மற்றும் பொருளாதார நிலையற்ற தன்மை போன்ற காரணங்களால், வரும் 6 மாதங்களுக்கு 22 நாடுகளில் உணவுப் பஞ்சம் ஏற்படும் என, ஐ.நா. ஆய்வு ஏஜென்சிகள் தெரிவித்துள்ளன.

வரும் மார்ச் வரையிலும் பசிபிக் கடலில் லா நினா என்ற கடலியல் மாற்றம் இருக்கும் என்பதால், காலநிலை மாற்றம் ஏற்பட்டு வேளாண் பொருள் உற்பத்தி பாதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சூடான், பாலஸ்தீன், ஹைதி, மாலி, லெபனான், மியான்மர், மொசாம்பி, நைஜீரியா, சிரியா, ஏமன் மிகவும் உச்சபட்ச உணவுப் பஞ்சத்தில் தவிக்கும் என்றும் ,  சோமாலியா, கென்யா, லெசோதோ, நமீபியா, நைகர், பர்கினா பாஸோ, எத்தியோப்பியா மற்றும் ஜிம்பாப்வே நாடுகள் உணவுப் பஞ்சத்தில் இரண்டாம் இடத்தில் இருக்கும் என்றும் ஐ.நா. ஆய்வில் கூறப்பட்டுள்ளது.