​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டியதால் வெடித்த ஏர் பேக்.. பலியான மாணவன்.. ஓவர் ஸ்பீடால் பறிபோன உயிர்

Published : Nov 01, 2024 10:01 PM

சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டியதால் வெடித்த ஏர் பேக்.. பலியான மாணவன்.. ஓவர் ஸ்பீடால் பறிபோன உயிர்

Nov 01, 2024 10:01 PM

சென்னையில் சீட் பெல்ட் அணியாமல் காரில் பயணித்த நடிகரின் 21 வயது மகன் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...

சென்னை ஆர்.ஏ புரம் ஸ்ரீ காலனி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் கார்த்திக். சீரியல் மற்றும் சினிமாவில் துணை நடிகராக நடித்துள்ளார்.

கார்த்திக்கின் மகன் 21 வயதான நித்தீஷ் ஆதித்யா வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் தனது நண்பர்கள் ஜெயகிருஷ்ணண் மற்றும் வெங்கட் ஆகியோருடன் காரில் வேளச்சேரி - தரமணி சாலை வழியாக வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

விஜயநகர் பேருந்து நிறுத்தம் அருகே வரும் போது திடீரென கார் சாலை நடுவே இருந்த தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் காரை ஓட்டி சென்ற நித்தீஷ் மற்றும் பயணம் செய்த ஜெய் கிருஷ்ணன், வெங்கட் மூவரும் பலத்த காயமடைந்தனர். அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது வழியில் நித்தீஷ் உயிர் இழந்த நிலையில் , மற்ற இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் சாலை விபத்தில் உயிரிழந்த நித்தீஷ் ஆதித்யா உடலை கைப்பற்றி ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விபத்து குறித்து போக்குவரத்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

சாலை விபத்தில் உயிரிழந்த நித்தீஷ் ஆதித்யா , கேளம்பாக்கம் படூர் இந்துஸ்தான் தனியார் கல்லூரியில் மூன்றாம் வருடம் (3rd year) படித்து வந்தார்.

தீபாவளி கொண்டாடி முடித்த பிறகு நண்பர்களுடன் கிரிகெட் விளையாட சென்று விட்டு காரில் வீடு திரும்பும் பொழுது திடீரென கார் சாலை நடுவே இருந்த தடுப்பு சுவரில் மோதி விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

நித்தீஷ், காரில் சீட் பெல்ட் போடாமல் காரை ஓட்டிய காரணத்தினால் விபத்தில் பலியானதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நிகழ்ந்த போது கார் முன்பக்கத்தில் இருந்த ஏர் பேக் காரை ஓட்டிச் சென்ற முகத்திற்கு வந்துள்ளது. அவர் சீட் பெல்ட் அணியாததால் இடித்த வேகத்தில் அவரது நெஞ்சு பகுதி நேராக ஸ்டேரிங்கில் இடித்ததால் சம்பவ இடத்திலேயே அவரது உயிர் பறிபோனதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த சீட் பெல்ட் என்பது சிறியவர், பெரியவர் என பாராமல் அனைவரும் சீட் பெல்ட் அணிந்து வாகனத்தை இயக்க வேண்டும் , ஆனால் தற்போது உயிரிழந்த நித்தீஷால், கார்த்திக் அவரது குடும்பத்தினர் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் வேதனை தெரிவித்தனர்...