​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தீபாவளி பட்டாசு வெடித்த போது நேர்ந்த விபரீதம்... தீப்பொறி பட்டு பற்றி எரிந்த கழிவு அட்டை கிடங்கு

Published : Oct 31, 2024 9:09 PM

தீபாவளி பட்டாசு வெடித்த போது நேர்ந்த விபரீதம்... தீப்பொறி பட்டு பற்றி எரிந்த கழிவு அட்டை கிடங்கு

Oct 31, 2024 9:09 PM

விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டியை அடுத்த அச்சம்பட்டியில் பழைய பிளாஸ்டிக் பொருட்கள், அட்டைகள், பிவிசி குழாய்கள் சேகரித்து வைத்திருந்த கிடங்கில் தீபாவளிக்காக வெடித்த பட்டாசுகளின் தீப்பொறி பட்டு தீப்பற்றியதில் கிடங்கு முழுவதும் எரிந்து சாம்பலானது.

கிடங்கு அமைந்திருந்த பகுதிக்கு தீயணைப்பு வாகனம் வர முடியாத நிலையில், போர்வெல் மற்றும் டிராக்டரில் கொண்டு வரப்பட்ட தண்ணீரின் உதவியுடன் நீண்ட நேரம் போராடி தீ அணைக்கப்பட்டது.