​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருச்சி காவிரி படித்துறையில் கிடந்த ராக்கெட் லாஞ்சர் குண்டு ... 1950-களில் அமெரிக்க ராணுவத்தால் பயன்படுத்தப்பட்டதாகத் தகவல்

Published : Oct 31, 2024 6:51 PM

திருச்சி காவிரி படித்துறையில் கிடந்த ராக்கெட் லாஞ்சர் குண்டு ... 1950-களில் அமெரிக்க ராணுவத்தால் பயன்படுத்தப்பட்டதாகத் தகவல்

Oct 31, 2024 6:51 PM

திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் சிவன் கோயிலுக்கு எதிரே காவிரி படித்துறையில் சுமார் ஒன்றரை அடி நீள ராக்கெட் லாஞ்சர் குண்டு கிடந்ததாக அப்பகுதி மக்கள் காவல்துறையிடம் தெரிவித்தனர்.

1950-களில், கொரியாவுக்கு எதிரான போரில் அமெரிக்க ராணுவத்தால் இவ்வகை ராக்கெட் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவித்த திருச்சி எஸ்.பி. வருண் குமார், அது ஜீயாபுரம் பகுதிக்கு எப்படி வந்தது என்பது குறித்து விசாரித்துவருவதாகவும் கூறியுள்ளார்.