தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வத்தலக்குண்டு, நிலக்கோட்டை சுற்றுவட்டாரத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை நடந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கேரளாவில் இருந்து லாட்டரிகளை வாங்கிவந்து விவசாயிகள், வியாபாரிகள், தினக்கூலித் தொழிலாளர்களை குறிவைத்து குடிசை தொழில் செய்வது போல் வீடுகளிலும், கடைகளிலும் விற்பனை நடப்பதாகக் கூறுகின்றனர்.
குடும்பங்களை பாதிக்கும் சட்டவிரோத லாட்டரி விற்பனையை காவல்துறை தடுத்துநிறுத்தவேண்டும் என, சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.