இறந்த ஆன்மாக்களின் நினைவாக நியூயார்க்கில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் புதிதாக மூன்று சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.
இறந்த ஆன்மாக்களை நினைவுகூரும் வகையில் நவம்பர் ஒன்றாம் தேதியன்று பிரார்த்தனை செய்யும் பிரம்மாண்டமான நிகழ்வு நடைபெற உள்ளது.
இந்த நாட்களில் தங்கள் அன்புக்குரியவர்களை சந்திக்க மறைந்தவர்களின் ஆன்மாக்கள் பூமிக்கு வருவதாக மெக்சிகோவில் நம்பிக்கை இருந்துவருகிறது.
இந்நிகழ்வின்போது, குடும்பத்தில் உறவினர்களை இழந்தவர்கள் அவர்களை உளப்பூர்வமாக நினைத்து வணங்கிச் செல்கின்றனர்.