அர்ஜெண்டினாவில், கடற்கரையோர ரிசார்டுகளுக்குப் பெயர் பெற்ற வில்லா ஜிசல் நகரில், புனரமைப்பு பணிகள் நடைபெற்றுவந்த 10 மாடி விடுதி ஒன்று அதிகாலையில் திடீரென இடிந்து விழுந்தது.
கடந்த ஆகஸ்ட் மாதமே அங்கு கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் தடை விதித்திருந்த நிலையில், அனுமதியின்றி புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த 9 ஊழியர்கள் இடிபாடுகளுக்கு இடையே சிக்கியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அவர்களை மீட்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.