​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருச்செந்தூரில் 50 அடி தூரத்திற்கு உள்வாங்கிய கடல்..

Published : Oct 29, 2024 6:17 PM

திருச்செந்தூரில் 50 அடி தூரத்திற்கு உள்வாங்கிய கடல்..

Oct 29, 2024 6:17 PM

திருச்செந்தூரில் கோயில் கடற்கரையில் கடல் தண்ணீர் சுமார் 50 அடி தூரத்திற்கு உள்வாங்கியது.

வழக்கமாக அமாவாசை, பௌர்ணமி தினங்களில் குறிப்பிட்ட நேரம் வரை கடல் உள்வாங்கும் நிலையில், அமாவாசைக்கு 3 நாட்களுக்கு முன்பாகவே  உள்வாங்கியதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

கடல் உள்வாங்கியதால், நாழிக்கிணறு முதல் அய்யா கோவில் வரையிலான சுமார் 200 மீட்டர் நீளத்திற்கு பாசி படிந்த பாறைகள் கடலில் காணப்பட்டது.