லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு எதிரான முறைகேடு வழக்கை முடித்து வைத்த ஆலந்தூர் நீதிமன்றத்தின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டு நங்கநல்லூரைச் சேர்ந்த நாகராஜன் என்பவரது வீட்டில் 7 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது தொடர்பாக மார்டின், அவரது மனைவி லீமா ரோஸ் உள்ளிட்ட 4 பேர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரும், சட்டவிரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்திருந்தன.
குற்றப்பிரிவு போலீஸார் அளித்த அறிக்கையை ஏற்று 2022ஆம் ஆண்டு ஆலந்தூர் நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்ததை எதிர்த்து அமலாக்கத்துறை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதனடிப்படையில், அமலாக்கத்துறை மற்றும் குற்றப்பிரிவினர் மீண்டும் விசாரணை நடத்த நீதிபதிகள் உத்தரவிட்டனர்.