கோவை ஒப்பணக்கார வீதி உட்பட நகரின் முக்கியமான கடை வீதிகளில் தீபாவளிக்கான புத்தாடைகள், நகைகள், இனிப்புகள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. போலீசார் ஆங்காங்கே தற்காலிக கோபுரங்கள் அமைத்து, ஒலிப்பெருக்கி மூலம் போக்குவரத்தை சரி செய்வதும் பாதுகாப்பாக செல்லுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்துவதுமாகவும் இருந்தனர்.
ஈரோடு ஈஸ்வரன் கோவில் வீதி, மணிக்கூண்டு, ஆர்கேவி சாலை, பன்னீர் செல்வம் பூங்கா உள்ளிட்ட இடங்களில் தீபாவளி விற்பனை களைகட்டியது.
மதுரையில் மழை பாதிப்புகளைக் கடந்து வந்த மக்கள், தீபாவளியை வரவேற்கும் விதமாக கடை வீதிகளில் பொருட்கள் வாங்கக் குவிந்தனர்.
சேலம் சின்ன கடை விதி, பழைய பேருந்து நிலையம், நான்கு ரோடு, புதிய பேருந்து நிலையம், ஐந்து ரோடு உள்ளிட்ட பகுதிகளிலுள்ள கடைகளில் தீபாவளி வியாபாரம் களைகட்டியது. சின்னக்கடை வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், மாற்றுப்பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.