​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காசாவில் 2 நாள் போர் நிறுத்தம் - எகிப்து அதிபர் யோசனை

Published : Oct 28, 2024 6:54 AM

காசாவில் 2 நாள் போர் நிறுத்தம் - எகிப்து அதிபர் யோசனை

Oct 28, 2024 6:54 AM

காசாவில் இரண்டு நாட்கள் போர் நிறுத்தம் கொண்டு வருவதன் மூலம் இரு தரப்பிலும் தாக்குதலை நிறுத்தி, பணயக் கைதிகளை மீட்கலாம் என, எகிப்து அதிபர் அப்துல் பத்தா அல் சிசி தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் மற்றும் காசா தரப்பு பிரதிநிதிகள் இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படுவதாகவும், இரு தரப்பிலும் ஒருமித்த கருத்து ஏற்பட வேண்டுமென்றும் அல் சிசி தெரிவித்துள்ளார்.

ஆனால், ஹமாசை ஒழிக்கும் வரை போரை நிறுத்த வழியில்லை என்று இஸ்ரேலும், காசாவை விட்டு இஸ்ரேல் ராணுவம் முழுமையாக வெளியேறும் வரை போர் நிறுத்தம் இல்லை என்று ஹமாசும் தெரிவித்துள்ளன.