உலகளவில் உள்ள அமெரிக்க தனியார் நிறுவனங்களுக்கும் - அமெரிக்க வெளியுறவுத் துறைக்கும் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் ஒசாக் அமைப்பின் இந்திய வருடாந்திர கூட்டத்தை சென்னையில் அமெரிக்க துணைத் தூதர் கிறிஸ் ஹோட்ஜஸ் மற்றும் அமைச்சர் பழனிவேல் தியாக ராஜன் தொடங்கி வைத்தனர்.
ஒசாக் கூட்டம் சென்னையில் நடைபெறுவது அமெரிக்கா - இந்தியா இடையேயான வலுவான வர்த்தக மற்றும் ராஜதந்திர உறவை பிரதிபலிக்கும் வகையில் இருப்பதாக அமைச்சர் பழனிவேல் தியாக ராஜன் தெரிவித்தார்.