​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஒடிசாவின் வடக்கு கடலோர பகுதியில் 120 கி.மீ. வேகத்தில் டானா தீவிரப் புயலாக கரையைக் கடந்தது

Published : Oct 25, 2024 6:17 AM

ஒடிசாவின் வடக்கு கடலோர பகுதியில் 120 கி.மீ. வேகத்தில் டானா தீவிரப் புயலாக கரையைக் கடந்தது

Oct 25, 2024 6:17 AM

டானா தீவிரப் புயலாக கரையைக் கடந்தது

120 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது

ஒடிசாவின் வடக்கு கடலோர பகுதியில் தீவிரப் புயலாக கரையைக் கடந்தது 'டானா'

ஒடிசாவின் பிடர்கனிகா மற்றும் தமரா அருகே கரையை கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தகவல்

மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 120 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசியது

புயல் கரையைக் கடந்தபோது கடல் சீற்றம்- பல அடி உயரத்திற்கு அலைகள் மேலெழும்பின

120 கி.மீ. வேகத்தில் காற்று வீசியதால் கடலோரப் பகுதிகளில் ஏராளமான மரங்கள் விழுந்தன

11 லட்சம் பேர் வெளியேற்றம்

ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோரப் பகுதிகளில் இருந்து 11 லட்சத்திற்கும் அதிகமானோர் வெளியேற்றம்

டானா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைப்பு

மேற்கு வங்கத்தில் 6 லட்சம் பேரும், ஒடிசாவில் 5 லட்சம் பேரும் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர்

விமான நிலையங்கள் மூடல்

புயல் காரணமாக புவனேஸ்வர் மற்றும் கொல்கத்தா உள்ளிட்ட விமான நிலையங்கள் மூடப்பட்டன

காலை 9 மணிக்குப் பின் படிப்படியாக விமானசேவைகள் தொடங்கப்படும் எனத் தகவல்

எக்ஸ்பிரஸ்- பாசஞ்சர் ரயில்கள் ரத்து

டானா புயல் காரணமாக ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் வழியாகச் செல்லும் 400 ரயில்கள் ரத்து

எக்ஸ்பிரஸ் மற்றும் பாசஞ்சர் ரயில்கள், புறநகர்ப் பகுதிகளுக்கான மின்சார ரயில்சேவைகளும் நிறுத்தம்