பச்சிளம் குழந்தையின் கழுத்தை அறுத்து, வீசிச் சென்ற கொடூரம் - தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
Published : Oct 23, 2024 11:11 AM
பச்சிளம் குழந்தையின் கழுத்தை அறுத்து, வீசிச் சென்ற கொடூரம் - தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
Oct 23, 2024 11:11 AM
சிங்கம்புணரியில், பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தையை, கழுத்தை அறுத்து குடியிருப்பு பகுதியில், இரவில் வீசி சென்றது யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கழுத்திலும், மணிக்கட்டிலும் கத்தியால் வெட்டப்பட்ட நிலையில், உயிருக்கு போராடிய ஆண் குழந்தையை, மரியம் பீவி என்பவர் மீட்டு சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.