​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தி.மு.க கூட்டணிக்குள் புயல் வீசத்தொடங்கிவிட்டது - இ.பி.எஸ்

Published : Oct 22, 2024 5:07 PM

தி.மு.க கூட்டணிக்குள் புயல் வீசத்தொடங்கிவிட்டது - இ.பி.எஸ்

Oct 22, 2024 5:07 PM

சேலம் கொங்கணாபுரத்தில் நடந்த அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, தி.மு.க கூட்டணிக்குள் புயல் வீசத்தொடங்கிவிட்டதாகவும், அது சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி மாற்றத்திற்கு வித்திடும் எனக் கூறினார்.

மேலும், தி.மு.க ஆட்சியில் பெரும்பாலான துறைகளில் ஊழல் மலிந்துவிட்டதாக குற்றம்சாட்டிய அவர், உரிய எண்ணிக்கையில் புதிய பேருந்துகளை தமிழக அரசு வாங்கத்தவறியதே தனியார் பேருந்துகளை நம்பும் நிலைக்குச் சென்றதற்கான காரணம் என்றார்.