திருவாலங்காடு அருகே காவேரிராஜபுரம் ஊராட்சியில் எந்திரங்கள் மூலம் குளம் வெட்டும் பணியை முடித்து விட்டு, 100 நாள் திட்டப் பணியாளர்கள் வேலை செய்தது போல் கணக்கு காண்பித்து முறைகேடு நடப்பதாக புகார் எழுந்துள்ளது.
பல்வேறு பணிகளை இயந்திரம் மூலம் செய்துவிட்டு, ஆட்கள் செய்தது போல் கணக்கு காட்டி, அவரவர் வங்கிக் கணக்கிற்கு வரும் பணத்தை பணி தள பொறுப்பாளர்கள் மூலம் ஊராட்சி நிர்வாகிகள் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இப்புகார் குறித்து விசாரணை நடத்தப்படும் என திருவள்ளூர் மாவட்ட திட்ட இயக்குநர் தெரிவித்துள்ளார்.